பிரபல மலையாள பாடகியும், நடிகையுமான மஞ்சுஷா மோகன்தாஸ் சாலை
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபல
மலையாள சேனல் ஒன்றில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்
மஞ்சுஷா மோகன்தாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
அதன் காரணமாக இவருக்கு படத்தில் பாடக்கூடிய வாய்ப்புகள் நிறைய தேடி வந்தன.