நடிகர் அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிவக்குமார் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் உடல் அழுகிய நிலையில் இறந்துகிடந்தார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1997 ஆம் ஆண்டு நடிகர் அஜீத், மந்த்ரா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ரெட்டை ஜடை வயசு. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் சி.சிவக்குமார்.