மாணவர்கள் அவர்கள் தாய் மொழியில் கற்றால் தான் கல்வியில் முன்னேற்றமடைய முடியும் மத்திய இணை அமைச்சர் சத்தியபால் சிங் அரியூரில் பேச்சு
வேலூர்மாவட்டம்,அரியூர் நாராயணி தங்ககோவில் வளாகத்தில் வித்யா நேத்ரம் என்ற ஏழை மாணவர்கள் 600-பேருக்கு உயர் கல்வி பயில கல்வி உதவிதொகை வழங்கும் விழா தங்ககோவில் நிறுவனர் சத்தியம்மா தலைமையில் நடைபெற்றது இதில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் நீர்பாசனத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் கலந்துகொண்டு கல்வி உதவிதொகையினை வழங்கினார் இதில் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் பேசுகையில் நான் எனது தாய்மொழியின் வாயிலாக தான் கல்வி கற்றேன் ஆறாம் வகுப்பு வரையில் ஆங்கிலத்தை கற்கவில்லை அதன் பின்பு தான் ஆங்கிலம் பயின்றேன் ஆங்கிலம் என்பது தகவல் பரிமாற்ற மொழிதான் மாணவர்களாகிய நீங்கள் முதலில் உங்களின் தாய்மொழியை முழுவதுமாக கற்கவேண்டும் அதன் பின்பு தாய்மொழியின் வாயிலாகவே கல்வி கற்பது சிறந்தது தற்போது மத்தியில் உள்ள இந்திய அரசாங்கம் கல்விகொள்கையில் பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்துள்ளது மேலும் கல்விக்காகவும் மாணவர்களின் மேம்பாடு மற்றும் நலனுக்காக பலபுதிய திட்டங்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருவதா அமைச்சர் சத்யபால் சிங் பேசினார்
Des : Union Minister of State for Education Sathiyapat Singh Ariyur will be able to educate students in their mother tongue