குழந்தைகள் புகார் தெரிவிக்கலாம்...நீதிபதி அறிவுரை- வீடியோ

Oneindia Tamil 2018-07-23

Views 517

காட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. குழந்தைகளிடம் யாரேனும தவறாக நடந்துகொண்டால் ஆசிரியர்களிடமோ அல்லது காவல்துறையைபொதுமக்களிடமோ கூறி தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குழந்தைகளிடையே பேசுகையில் தெரிவித்தார். வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழுவின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சட்டபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி,காட்பாடி நீதித்துறை நடுவர் ஜெயசுதாகர்,வழக்கறிஞர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர் இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் பேசுகையில் குழந்தைகளுக்கு நல்ல தோடுதல் தீய தோடுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்த வேண்டும் அப்போது தான் அவர்கள் தங்களை பாதுகாத்துகொள்ள முடியும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் குறையும் குழந்தைகள் தங்களிடம் யாராவது பாலியல் முறையில் தகாமல் நடந்துகொள்ள முயற்சி செய்தால் உடனடியாக தப்பி சென்று ஆசிரியர்களிடம் புகார் அளிக்க வேண்டும் இல்லையென்றால் காவல்துறையினர் அல்லது பொதுமக்களின் உதவியை நாடினால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எளிதில் தடுக்கலாம் என்று பேசினார்.

Des : A law awareness camp was conducted on behalf of the Legal Aid Committee on Child Protection in Kabaddi Government Children's Archive. The District Judicial Magistrate said the children should be protected by telling the police or the police if someone misbehaved with them.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS