பாகிஸ்தானில் வருகிற 25ந்தேதி பொது தேர்தல் நடைபெறுவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தின் போது அந்நாட்டின் அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அப்துல்லா பகுதியில் அவாமி தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவரான தவுத் அசாக்ஜை என்பவர் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வலது கையில் குண்டு காயம் பட்ட அவரை குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து விட்டார் என தகவல் தெரிவிக்கின்றன
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV