ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் முகமது அசாம் என்பவர் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கத்தாரில் இருந்த வந்த இவரது நண்பர் முகம்மது சலாம் மற்றும் உறவினர்களுடன் பிதார் மாவட்டம் முர்கி கிராமம் வழியாக காரில் சென்றுள்ளார். கிராமத்தில் சாலை ஓரத்திலிருந்த கடையில் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த பள்ளி குழந்தைகளுக்கு முகமது அசாம் சாக்லேட்களை வழங்கியுள்ளார். ஆனால் குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தியை நம்பிய கிராம மக்கள் சிலர் அவர்களை தவறாக நினைத்து இருசக்கர வாகனத்தில் காரை வேகமாக பின் தொடர்ந்துள்ளனர். அப்போது வேகமாகச் சென்ற கார், கட்டுப்பாட்டினை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள் சிக்கியது. ஆனால் அப்பொழுதும் அவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில் யாரும் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. இதில் முகமது அசாம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களை போலீர்சார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 30-க்கும் அதிகமானோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV