புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவு வசித்து வருவதால் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா இடையிலான உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் பெரியத்திரையில் கடற்கரையில் ஒளிப்பரப்பட்டது. இப்போட்டியினை புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் கண்டு ரசித்தனர். இறுதியாக 4-2 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர். பிரான்ஸ் வெற்றி பெற்றதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் வாழ்த்து தெரிவித்தர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV