கோவை மாவட்டம், தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி, மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி பலியானது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்ட முறை குறித்தும், முதலமைச்சர் பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சருடன் தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கல்வித்துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு, கல்லூரி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV