டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி, ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு சாலையில் வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 18 வயதுக்கு குறைவான சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உச்சநீதிமன்றம் மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV