கம்பம் பகுதியில் உள்ள கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் தென்னை மரம், வேப்பமரம், அரசமரம், சந்தன மரங்கள் என பல வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கம்பராயப்பெருமாள் திருக்கோவில் மேற்கு நுழைவாயிலின் தெற்கு பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நாற்பது ஆண்டுகள் பழமையான சந்தன மரம் ஒன்றின் ஒரு பகுதியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கடத்திச்சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாக கமிட்டியினர், அளித்த புகாரின் பேரில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV