இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். தனியார் கல்லூரி ஒன்றில் 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இர்பான் பதானிடம் அவர் விளையாடியபோது வழிநடத்திய சிறந்த கிரிக்கெட் கேப்டன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இர்ஃபான் பதான், அனைத்து கேப்டன்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும், ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், கங்குலி தலைமையில் விளையாடும் போது அது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும், என்றென்றும் பாராட்டுக்குரிய வகையில் அவரது தலைமை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் கேப்டன் டோனியின் தலைமை போற்றுதலுக்கு உரியது என்றும், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கல்தூண் எனவும் வர்ணித்துள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV