கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த மண்ணியார் வாழ்க்கை கிராமத்தின் வழியே கொள்ளிடம் ஆறு பாய்கிறது. அங்கிருந்து திருவாரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுகிறது. தற்போது தண்ணீர் இல்லாததால் கொள்ளிடம் ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க பணிகளை தொடங்கியுள்ளது. இதனை எதிர்த்து விவசாயிகள், கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கொள்ளிடம் ஆற்றின் கரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்புகளையும் மீறி மணல் குவாரி அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமடையும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV