காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின்படி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்கவில்லை என, தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் இந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாதத்தின் பங்காக தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV