சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி- இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

Sathiyam TV 2018-07-17

Views 0

நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் நேற்று இறுதிப் போட்டியில் மோதின. ஆஸி. வீரர் பிளேக் ரோவர்ஸ் 24வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் இந்திய வீரர் விவேக் பிரசாத் அற்புதமாக பீல்டு கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்று15வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS