வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வரும் திருப்பூர் மாவட்டத்தில், குட்கா பயன்பாடும் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், கருப்பையா என்பவர் , தனது குடோனில், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து,1.20 லட்சம் மதிப்பிலான 110 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கருப்பையாவிடம் விசாரித்ததில், திருப்பூர் போயம் பாளையம் பகுதியில் உள்ள சுரேஷ் எனும் வட மாநில இளைஞர் ஒருவர் தனக்கு குட்கா சப்ளை செய்து வந்ததாக தெரிவத்தார். இதனையடுத்து, போயம்பாளையம் கணபதி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வடமாநில இளைஞர் சுரேஷ் வீட்டில் சோதனையிட்ட போது, குடியிருப்பு பகுதிக்குள், கிடங்கு அமைத்து, 2.50 லட்சம் மதிப்பிலான 400 கிலோ குட்கா பொருட்கள் பதக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், 400 கிலோ குட்கா பொருட்களையும் உணவு பாதகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV