தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை, தவிர்க்கவே இந்த முறை கொண்டு வருவதாகவும், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதிற்கில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார். எவ்வித குறைப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவவிட்டார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV