மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரிடம் பல தரப்பட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில், குரல் மாதிரி சோதனைக்காக நிர்மலா தேவியை, சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து செல்லலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட நிர்மலா தேவி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நிர்மலா தேவியை குரல் மாதிரி சோதனை செய்ய தடய அறிவியல் துறைக்கு CBCID போலீசார் அழைத்து செல்ல உள்ளனர். நிர்மலா தேவியின் குரல் மாதிரிகளை வைத்து, ஆடியோவில் இருக்கும் குரல் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அதேபோல் அவர் ஆடியோவில் பேசிய நபர்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV