ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொற்சாலையில் பணியாற்றி வரும், வாசுதேவராஜ், கோபால், திருமலை மற்றும் மீனாட்சி நாதன் மற்றும் வாசுதேவராஜனின் மனைவி ரமா ஆகிய 5 பேரும் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், ஓசூர் பாகலூர் சாலையில் தில்லை நகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்னால் பலமாக மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த வாசுதேவராஜ், அவரது மனைவி ரமா, கோபால் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார் ஓட்டி வந்த திருமலை மற்றும் மீனாட்சிநாதன் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV