வேலூர் மாவட்டம், வாலாஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென வந்த மர்ம கும்பல், ராஜேந்திரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த எஸ்.எஸ்.ஐ ராஜேந்திரன், வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன், வாலாஜாவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் பாஸ்கார், பாலு ஆகியோரது மாட்டு வண்டியை பிடித்து, ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, பாஸ்கர் மற்றும் பாலு உட்பட 4 பேரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தப்பியோடிய மணல் கொள்ளையர்களை, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV