கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும், கனமழை காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மங்களூரு தாலுகாவிற்குட்பட்ட பண்ட்வால் பகுதியில் இருந்த பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த பாலம் இடிந்து விழுந்ததால், முலர்பட்ணா-பண்ட்வால் இடையே சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதாகவும், ஆனால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV