சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிராக கடந்த 22ம் தேதி, கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 192 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் வரும் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஏராளமான திமுகவினர் ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். பேரணியாக செல்ல முயன்ற மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நேற்று மாலையே விடுதலை செய்தனர். இந்நிலையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV