புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி உட்பட 7 பேர் கடந்த ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் பிற மாநில மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இதனால், பிறமாநில மாணவர்களுக்கு தமிழக மாணவர்களின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழக மருத்துவ கலந்தாய்வில் கலந்துக் கொண்ட பிற மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் நிச்சயம் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அரசும் முறையாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV