ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழகர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியம் தொலைக்காட்சியின் வாயிலாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் என 21 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த உரிமையாளர்கள் முகமது சல்லா மற்றும் அவரது சகோதரர்களின் 3 படகுகள் மூலம் கடந்த 6 மாதங்களாக மீன்பிடித்து வந்தனர். ஆனால் கடந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு உரிய பங்கை ஈரான் உரிமையாளர்கள் சமீபகாலமாக கொடுக்கவில்லை. மேலும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துகொண்ட படகு உரிமையாளர், மீனவர்களை அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து விரட்டியடித்துள்ளனர். இதனால், 21 மீனவர்களும் நாடு திரும்ப முடியாமல் ஈரானில் நடுரோட்டில் தவித்து வருகின்றனர். இதனிடையே தமிழக மீனவர்களை, ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளது. இந்நிலையில் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியம் தொலைக்காட்சியின் வாயிலாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV