கரூர் குளித்தலை அருகே போக்கால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.
மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குளித்தலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து குளித்தலை- மணப்பாறை சாலை வழியாக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. குளித்தலை -மருங்காபுரி வரை உள்ள பகுதி மக்களுக்கு இதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த குழாய்களில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதும், பின்னர் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அதை சரிசெய்வதும் வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் குளித்தலை அருகே உள்ள இறும்பூதிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பல நாட்களாக கசிந்து வெளியேறியுள்ளது. இதை உடனடியாக சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழாயில் எற்பட்ட உடைப்பு பெரிதாகி சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து. பல லிட்டர் தண்ணீர் வீணாகியது. இதையடுத்து மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உடைப்பு சரி செய்யப்பட்டது. இருப்பினும். அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் தண்ணீர் வீணாகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV