தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதலாவது உலையில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட பழது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பணிகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும் என தலைமை பொறியாளர் நடராஜன் கூறியுள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV