வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள், விலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் சோலார் மின்வேலி அமைத்துள்ளதாகக் கூறி, பேராசிரியர் முருகவேல் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என வன பாதுகாப்பு அதிகாரி தெரிவித்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். யானைகள் வழித்தடமான சத்தியமங்கலம் வனப்பகுதியில், விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க மின்வேலி அமைக்க குத்தகைதாரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், போலீசார் உதவியுடன் மின்வேலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வனம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர். இதுகுறித்து ஜூலை 25 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட வன அதிகாரிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV