சென்னையில் உல்லாசமாக இருந்தபோது காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதால் துக்கம் தாளாமல் காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் அஸ்வினி (20). சென்னை சட்டக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுலத்தைச் சேர்ந்தவர் தென்னவன் (24). தென்னவனும் அஸ்வினியும் பேஸ்புக் மூலம் காதலித்து வந்தனர். இந்நிலையில் தென்னவன் சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று வந்தார்.