அரசு பேருந்துகள் அணைத்து மாநிலங்களிலும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான தொகையை தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார் என்று போகுவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பேருந்துகள் அணைத்து மாநிலங்களிலும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான தொகையை தமிழக முதலமைச்சர் வழங்கிவருகிறார் என்றும் இதுவரை அதிமுக ஆட்சியில் கடந்த 7-ஆண்டுகளில் 12-ஆயிரத்து 500-கோடியை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. அதே சமயம் திமுக அரசு 3,685-கோடி மட்டுமே வழங்கி இருக்கிறது என்றார் மேலும் சென்னையில்பேட்டரி பேருந்துகள் இயக்க சார்ஜிங் ஸ்டேசன்களை அமைக்க லண்டனை சேர்ந்த சி.40-என்ற அமைப்போடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதற்க்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டவுடன் பேட்டரி பேருந்துகள் சென்னையில்இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்