நகைக்காக உடன் படித்த தோழியை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் கொலை செய்த மாணவிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சமுக சேவை செய்ய வேண்டும் என்று தண்டனை விதிக்கபட்டுள்ளது
விழுப்புரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த ரவியின் மகள் சசிரேகா ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியின் 9–ம் வகுப்பு மாணவியாணஇவர் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் சசிரேகாவைகாணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா பிணமாக மிதந்தார், இது பற்றி கிளியனூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பள்ளியில் படித்த கொலையான சசிரேகா தோழி 10–ம் வகுப்பு படிக்கும் மாணவி மொளசூரை சேர்ந்த அனிதா தான் ½ சவரன் தங்க நகைக்காக கிணற்றில் தள்ளி கொலைசெய்து தங்க நகை திருடியது தெரியவந்தது. உடனடியாக கைது செய்யப்பட்ட அனிதா கடலூர் அரசினர் பெண்கள் கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கபட்டார்.. இந்நிலையில் இந்த வழக்கு விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டது.. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மும்தாஜ் குற்றவாளி அனிதா வரும் 1௦ ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு பகல் நேரங்களில்திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சமுக சேவை செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டார் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.