சேலத்தில் இருந்து சென்னைக்கு அமைக்கப்பட உள்ள 8 வழி சாலையை வரவேற்பதாக தனியரசு தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 8-வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கொங்கு இளைஞர் பேரவை வரவேற்பதாக கூறினார். மேலும் சாலை அமைக்க நில கையகப்படுத்தும் போது நில உடமையாளர்களுக்கு இழப்பீடு தொகை சந்தை மதிப்பை விட நான்குமடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்றதுடன் நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்கள்,மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.குடியிருக்கும் வீட்டிற்கு சதுரடி ஒன்றிற்கு 300-ரூபாய் வழங்குவதை ஏற்கமுடியாது. சந்தை மதிப்பில் ஒரு சதுர அடி கட்டுவதற்கு 1500-ரூபாய் செலவாகிறது. எனவே சதுர அடிக்கு ரூபய் 1500-இழப்பீட்டை முன்கூட்டியே வழங்கி அவர்கள் மாற்று இடத்தில் வீடு கட்டிய பிறகே வீட்டை இடிக்க வேண்டும் என்றும், மக்களாட்சி தத்துவத்தில் மக்களுக்கு எதிரான அரசு மேற்கொள்ளும் நிலைப்பாட்டை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார். தொடர்ந்து பேசும் போது,மேலைநாடுகளில் உள்ள சாலை வசதிகளை போல் தமிழகத்திலும் ஏற்படுத்த முயலும் போது அதனை எதிர்ப்பது அறிவுக்கு முரணானது என்றும் சாலை அமைக்கும் திட்டத்தை தான் வரவேற்பதாக தெரிவித்தார். மேலும்,பிஜேபி மத்திய அரசு தனது ஆட்சி இல்லாத பகுதிகளில் கவர்னர்களை நியமித்து இரட்டை அதிகார மையத்தை உருவாக்க நினைப்பதை கொங்கு இளைஞர் பேரவை கண்டிக்கிறது என்றும்,அந்த அடிப்படையில் மாநில சுயாட்சிக்காக கருப்பு கொடி போராட்டம் நடத்தும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ஆளுனரின் ஆய்வை தமிழக முதலமைச்சரும்,துணை முதலமைச்சரும் கட்டுபடுத்தி நிராகரிப்பார்கள் என்றார்.
des: a private way to welcome the 8-way road from Salem to Chennai.