இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தாலும் பாஸ்போர்ட் வேண்டும் என்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் “ஒன் இந்தியா-ஒன் பாஸ்போர்ட்” திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் எந்தப்பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் பெங்களூரில் பணிபுரிந்தால் அவர் அங்கிருந்தவாறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் போலீஸ் விசாரணை மட்டும் மதுரையில் நடைபெறும் என்றார். விசாரணை முடிந்தபிறகு சம்பந்தப்பட்டவரின் இருக்கும் முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். என்றதுடன் பாஸ்போர்ட் விசாரணையும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்..
மேலும் கிரிமினல் குற்றவாளிகள் மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை அவசியம் இல்லை என்று கூறினார். செல்போனில் “எம்.பாஸ்போர்ட் சேவா” என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் வாயிலாக பாஸ்போர்ட் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நேரம், தேதி ஆகியவற்றை விண்ணப்பதாரர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.
Desc: Passport Officers can apply for passports in any state of India.