அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு முந்தைய ஷீலா தீட்சித் அரசு போல இனி முழு அதிகாரத்தோடு இயங்கும் வாய்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
டெல்லியில் அதிகபட்ச அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கா அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா என்ற சர்ச்சை பல சந்தர்ப்பங்களில் வெடித்த நிலையில், ஆம் ஆத்மி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
Arvind Kejriwal will now have same powers that Sheila Dikshit had says Raghav Chadha AAP spoke person.