பந்து சேதப்படுத்தும் விவகாரத்தில் அதிக தண்டனை வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி பந்தை சேதப்படுத்தினால், 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்கள் முன்பு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டியில், திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியதாக அறியப்பட்டது. அப்போது, ஐசிசி சட்ட விதிகளின்படி, ஸ்மித் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை மற்றும் பான்க்ராப்ட் போட்டி சம்பளத்தின் 75 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என்ற தண்டனை மட்டுமே கொடுக்கப்பட்டது.
ICC introduces stricter ball-tampering sanctions