புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபுர்வ குப்தா செய்தியாளரை சந்தித்தார் அப்போது பேசிய அவர் புதுச்சேரி நகரப்பகுதியில் அதிக அளவில் பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளது. இந்த நிலையில் புதுவை அண்ணாசாலை பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே சிறுவர் ஒருவர் சிலருக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து பெரிய கடைபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.அதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் மேலும் ஒரு சிறுவர் இதில் ஈடுப்பட்டுள்ளாதவும் தெரிவித்துள்ளார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கல்நகரில் மொத்தமாக வாங்கி புதுவையில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 116 சிறிய பாலிதின் கவரில் இருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது...மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபுர்வகுப்தா பாராட்டு தெரிவித்தார்
Police arrested the boys who sold cannabis in Pondicherry.