மோடி அரசு கொண்டு வந்துள்ள பேறு கால விடுப்பு தொடர்பான புதிய சட்டம் காரணமாக இந்தியாவில், சுமார் 18 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறது ஒரு சர்வே. 12 வாரங்களாக (3 மாதங்கள்) இருந்த, சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுமுறை நாட்களை, 26 வாரங்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு. கனடா, நார்வே போன்ற நாடுகளுக்கு பிறகு, மகப்பேறு காணும் மகளிருக்கு அதிக நலன் பயக்கும் ஒரு சட்டமாக இது பார்க்கப்பட்டது.
A new law to improve maternity benefits for women in India's workforce and encourage them to further their careers is likely to have the opposite effect, a survey showed.