பூம்பூம் மாட்டுக்காரர் எனப்படும் பழங்குடியின மக்கள் பழங்குடி சான்றிதழ் வழங்க கோரி தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு
ஈரோடு சந்தை பேட்டை மற்றும் வ.ஊ.சி பூங்கா அருகில் உள்ள புதிய சேமிப்பு கிடங்கு சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர் பூம்பூம் மாடுகளை வைத்து வித்தைகள் செய்து வருவாய் ஈட்டி வந்துள்ளனர் இவர்களின் குழந்தைகள் மேற்படிப்பு செல்ல முடியாமல் அரசு உதவியும் - எஸ் டி சான்றிதழ் பெற்று வேலைவாய்ப்பு பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் இதுபோன்று குழந்தைகள் பள்ளிப் படிப்பை எஸ்டி சான்றிதழ் இல்லாமல் படித்து பயன் பெற முடியவில்லை எனவும் கடந்த பல ஆண்டுகளாக பழங்குடிசான்று கேட்டு விண்ணப்பித்து மறுக்கப்படுகின்ற நிலையில் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதை தடுத்து உதவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளுடன் சான்று வழங்க கேட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சான்று வழங்கப்படுகிறது ஆனால் ஈரோடு மாவட்டத்தில் மறுக்கப்படுவதாக தெரிவித்தனர் இதனால் பட்ட படிப்பு வேலை வாய்ப்பு அரசு நல உதவிகள் எதுவும் பெற முடியவில்லை எனவும் தெரிவித்தனர்
des : The Tribunal of the Tribunal