பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிதான் அனைவரின் குறியாவார். எனவே அவரது பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மோடியின் உயிருக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் மோடி சாலை வழி பிரசாரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Home Minister sends a warning notice to all state police chiefs about the unknown severe threat to PM Narendra Modi.