பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தியவர்களை தட்டிகேட்ட காவலருக்கு கத்தி குத்து
தேனி வாகம்புளி தெருவில் குடியிருப்பவர் முகமது அனிஸ். இவர் தேனி ஆயுதபட்படையில் காவலராக பணி புரிந்துவருகிறார். இந்நிலையில் அவரது உறவினர் வீட்டிற்க்கு செல்லும் போது தென்கரை தெற்க்கு தெருவை சேர்ந்த கோன்றி முத்தையா,அருண்,உள்ளிட்ட மூன்று பேர் சாலையில் ஓரத்தில் அமந்து பொதுமக்களுக்கு இடையுராக மது அருந்தி கொண்டுத காதவார்த்தையில் சாலையில் செல்பவர்களை திட்டிக்கொண்டு இருந்தணர். அவ்வலியாக சென்ற முகமதுஅனிஸ் பெண்கள் இருக்கும் இடத்தில் மது அருந்தி விட்டு தகாதவார்த்தையில் ஏன் திட்டிக் கொண்டு இருக்கிரிர்கள் என்று தட்டி கேட்டதற்க்கு மது போதையில் இருந்த அவர்கள் முகமது அனிசை சராமரியாக தாக்கி கத்தியால் குத்தினர் இந்நிலையில் காய மடைந்த ஆயுதப்படை காவல் முகமது அனிஸ் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிண்றனர். மேலும் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.