தனியார் பள்ளி நிர்வாகியை மர்ம நபர்கள் சிலர் காருடன் கடத்தி சென்றதால் பரபரப்பு
புதுக்கோட்டை அறந்தாங்கி செல்லூம் சாலையில் தனியார் பள்ளி நடத்திவருபவர் தர்மராஜ் தனது காரில் டிரைவருடன் திருவரங்குளம் வேப்பங்குடி வழியாக செல்லும் போது அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் தர்மராஜ் மற்றும் டிரைவரையும் அவருடைய காரிலே கடத்தி சென்றுள்ளனர் இந்த தகவல் அறிந்த உறவினர்கள் கனே~; நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் புகாரின் பேரின் காவல்துறையினர் நான்குதனிப்படை அமைத்து திருவரங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.