காவேரியில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஆண்டும் ஜூன்12ஆம் தேதி தண்ணீர் திறக்காததால், கடைமடையில் 7 ஆம் ஆண்டாக குருவை சாகுபடி பொய்த்துபோய் உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் பெறும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் திறக்காததை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மீனம்பநல்லூர் கிராமத்தில் வறண்டு கிடக்கும் கோட்டூறான் பாசன வாய்க்காலில் மெழுகுவர்த்தி ஏற்றி தண்ணீர் வராத வாய்க்காலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து பெண்கள் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர். அப்போது தண்ணீர் திறந்து விடப்படாதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் தென்மேற்கு பருவ மழை காரணமாக தற்போது கர்நாடகா அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர் நிரம்பி உள்ளதால் தமிழக்கத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக செயல்படுத்தி நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.