கேரளாவில் நடிகை மேகா மேத்யூஸ் கார் விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் உயிருக்கு போராடியபோது யாரும் உதவி செய்யாமல் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். மலையாள படங்களில் நடித்து வருபவர் மேகா மேத்யூஸ். மம்மூட்டியின் மாஸ்டர்பீஸ் படத்தில் நடித்த அவர் தற்போது மோகன்லாலின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் மேகா தனது சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள கொச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்றார்.மேகா கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் எர்ணாகுளம் கிளம்பினார். காரை மேகா தான் ஓட்டிச் சென்றார். அவர் எர்ணாகுளம் அருகே உள்ள முளன்துருத்தி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் மேகாவின் கார் மீது மோதியது.