செந்நாய் போன்ற விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வன விலங்குகளை போல வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தினர். கோவை மாவட்டத்தை சுற்றி ஆனைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட வனத்தை ஒட்டிய பகுதிகள் உள்ளன. வனத்திலிருந்து காட்டு விலங்குகளான யானை, சிறுத்தை போன்றவைகள் அதிகமாக விவசாய பயிர்களை அழித்தும், ஆடு மாடுகளை கொன்றும், மற்றும் விவசாயிகளை தாக்கியும் பெரும் தொல்லையை ஏற்படுத்தி வருகின்றன.