பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை திருப்பதியில் வைத்து கொலை செய்ய சந்திரபாபு நாயுடு சதி திட்டம் தீட்டியதாக ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார். பாஜகவின் சார்பில் விஜயவாடாவில் நேற்று மெகா தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கலந்து கொண்டார்.