காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான ஜவுளிகடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நகை கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.