புதுச்சேரியில் 300 பவுன் நகை மற்றும் பல லட்சம் ருபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர் .
புதுச்சேரி முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் சரவணன் பாபு இறால்களைப் பதப் படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.வெள்ளிக்கிழமைதோறும் சரவணன் பாபு தனது குடும்பத்துடன் கோட்டக்குப்பம் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு ஞாயிற்றுக் கிழமை மீண்டும் முத்தியால்பேட்டைக்கு செல்வது வழக்கம்.அதுபோல் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோட்டக்குப்பம் சென்றுள்ளார். நேற்று காலை முத்தியால்பேட்டை வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் நகை .10 லட்சம் ரொக்கம் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஒரு உயர் ரக செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.