கோவை அருகே அமைதியாக சென்றுகொண்டிருந்த சின்னதம்பி என்ற யானையை இரண்டு பேர் கல்வீசி தாக்கி துன்புறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை துன்புறுத்தும் இந்த வீடியோ காட்சியானது தற்போது வெளியாகி உள்ளதால், இதனை கண்டு விலங்கு நல ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். கோவை மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான தடாகம், மாங்கரை, ஆனைகட்டி பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி நாள் தோறும் மலை அடிவார கிராமங்களுக்கு வருவது வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக தடாகம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளதால் அங்குள்ள பனை மர கூலை சாப்பிட யானைகள் நாள்தோறும் வருகிறது.