வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது
பூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டையை சேர்ந்த மனோகரன் அவரது மனைவியுடன் வெளியுறுக்கு சென்றுவிட்டு இன்று விடு திரும்பினார். வீட்டின் சாவியை வாசலுக்கு அருகே உள்ள சுவற்றில் மறைப்பாக வைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதை நோட்டம் விட்ட கொள்ளையர்கள் நேற்று மனோகரன் வெளியூர் சென்றிருந்த போது வீட்டின் கதவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய மனோகரன் கதவு உடைக்கபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பிரோ கதவு உடைக்கபட்டு அதில் இருந்த 30 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கபட்டது தெரியவந்தது அதனை அடுத்து நசரத் பேட்டை போலிசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்
des : The incident took place after the robbers broke the door of the house and robbed 30 shawl jewelry