துபாய்க்கு போகும் முதல் நாள் இரவு ஸ்ரீதேவி என்ன செய்தார்?- வீடியோ

Filmibeat Tamil 2018-05-30

Views 5.1K

#jhanvikapoor #kushikapoor #boneykapoor #sridevi #vogue


Janhvi Kapoor has talked about her mom Sridevi for the first time. She revealed as to what did Sridevi do the day before she left for Dubai.


துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படமான தடக் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஜான்வி தனது அம்மா பற்றி முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
அம்மா தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார். அவர் துபாய் செல்வதற்கு முதல் நாள் தூக்கம் வரவில்லை தூங்க வைங்க என்றேன். அம்மா பேக் செய்வதில் பிசியாக இருந்தார். அதன் பிறகு பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார் என்றார் ஜான்வி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS