திமுக ஆட்சியின் போது 13 முறை துப்பாக்கி சூடு நடத்திய அவரது தந்தை கருணாநிதி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முக ஸ்டாலினால் முடியுமா என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்த்தரமாக மூடிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் காவலர் மட்டும் அல்லாது தமிழக மூதல்வர் மீதும் கொலை வழக்கு பதிய வேண்டும் என தெரிவித்த முக ஸ்டாலின் திமுக ஆட்சியின் போது 13 முறை துப்பாக்கி சூடு நடத்திய அவரது தந்தை கருணாநிதி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.