Warned that the tidal waves will rise from 10 to 15 feet in the Kanniyakumari sea at 11.30 PM tomorrow night. Because of this, the fishermen have urged not to go to sea. Meanwhile, more than 1,500 fishermen still do not go fishing.
கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் 2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், எனவே, வரும் 30-ம் தேதி வரை குமரிக் கடல், மாலத்தீவு பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.